திருவெறும்பூர் அருகே பைனான்சியரை வரவழைத்து தாக்கி 5 பவுன் நகை, ரூ.1 லட்சம் பறிப்பு

திருவெறும்பூர், பிப்.17: திருவெறும்பூர் அருகே பழங்கனாங்குடி பகுதியில் பைனான்சியரை வரவழைத்து தாக்கி 5 பவுன் நகை, ஒரு லட்சம் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் 4 பேரை நவல்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி உறையூர் டிஎஸ் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் மதிவாணன்(28). இவர் உறையூர் பகுதியில் நகை அடகு வைக்க, அடகு வைத்த நகையை மீட்டு மறு அடகு வைக்க விற்பதற்கு பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஒரு நபர் நகையை மீட்டு அடகு வைக்க வேண்டும் என்று கூறி போனில் மதிவாணன் இடம் பேசியுள்ளனர். அதை நம்பி மதிவாணனும் அவரை பார்ப்பதற்காக திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பழங்கனாங்குடி இலந்தைப்பட்டி சாலைக்கு மதிவாணனை வர சொல்லியுள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு மதிவாணன் வந்தபோது போன் செய்த மர்ம நபர் மதிவாணனை தாக்கிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயின் காப்பு 3 பவுன், மோதிரம் அரை பவுன் என மொத்தம் 5 பவுன் நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாயை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இச்சம்பவம் குறித்து மதிவாணன் நவல்பட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: