கள்ளிக்குடியில் காய்கறிகள், பழங்கள், மலர்களுக்காக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

திருச்சி, பிப்.17: திருச்சி அடுத்த மணிகண்டம் ஒன்றியம், கள்ளிக்குடியில் ஒருங்கிணைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்களுக்கான வணிக வளாகத்தில் உயர்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் அபூர்வா, தொழில் நுட்ப கல்வி இயக்குநர் விவேகானந்தன், கலெக்டர் சிவராசு ஆகியோர் முன்னிலையில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது தலைமைச்செயலர் சண்முகம், கள்ளிக்குடி வணிக வளாகத்தினை விரைவில் முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். மேலும் ஒருங்கினைந்த வணிக வளாகமானது மாவட்ட விவசாயிகளுக்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும், தகுதியுள்ள குழுக்களுக்கும் மதிப்பு கூட்டு சிறு தொழில்களுக்கும் பயனுள்ள வகையில் சிறப்பான முறையில் உடனடி பயன்பாட்டிற்கு கொண்டு வர கலெக்டரிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து சேதுராப்பட்டியில் கட்டப்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாகவும், பாதை அமைப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாகவும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது அரசு தலைமைச்செயலர் அறிவுறுத்தல்

Related Stories: