பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது

சத்தியமங்கலம், பிப். 17: சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு 6ம் நம்பர் டவுன்பஸ் புஞ்சைபுளியம்பட்டி செல்வதற்காக புறப்பட்டது. பஸ்சில் கண்டக்டர் ரமேஷ் பணியில் இருந்தார். பயணிகளுக்கு டிக்கெட் வழங்கியபோது குடிபோதையில் இருந்த பயணி கனகராஜ் என்பவர் கண்டக்டர் ரமேஷிடம் தகராறில் ஈடுபட்டார். டிக்கெட் வாங்காமல் தொடர்ந்து பயணம் செய்த நிலையில் அரியப்பம்பாளையம் சந்திப்பில் பஸ்சை நிறுத்தி பயணி கனகராஜிடம் பயணச்சீட்டு வாங்குமாறு மீண்டும் கேட்டுள்ளார்.

Advertising
Advertising

இதில் ஆத்திரமடைந்த பயணி கனகராஜ் கண்டக்டர் ரமேசை தாக்கினார். இது குறித்து கண்டக்டர் ரமேஷ் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குடிபோதையில் இருந்த கனகராஜை பிடித்து விசாரிக்கும்போது கனகராஜ் தப்பியோடினார். தப்பியோடிய பெரியூரைச் சேர்ந்த கனகராஜை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: