துப்புரவு பணியாளர்கள் சங்க கூட்டம்

ஈரோடு, பிப். 17:   ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை துப்புரவு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா மற்றும் கூட்டம் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், ஜனார்த்தனன், முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் பல ஆண்டுகளாக துப்புரவு பணியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி வந்தனர். இதைதொடர்ந்து 2017ம் ஆண்டு அரசாணை 47 வெளியிடப்பட்டது. அதில் துப்புரவு பணியாளர்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்றி அறிவித்தது.

ஆனால் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்திலேயே வைக்கப்பட்டனர். இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றி வரும் 1,600 துப்புரவு பணியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டனர். இதனால் இவர்களுக்கு ஊதிய உயர்வும் வந்தது. ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு பதிவுறு எழுத்தர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

இதேபோல நிலுவை பணப்பலன்களையும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதில் மதுரை உயர்நீதிமன்றத்தில் துப்புரவு பணியாளர்களுக்காக வழக்கு போட்டு காலமுறை ஊதியத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்த நிர்வாகிகள் ஜனார்த்தன், முருகேசன் ஆகியோரை பாராட்டி கவுரவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மயில்வாகனன், நிர்வாகிகள் வடிவேல், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: