கமுதியில் பிளாஸ்டிக் பறிமுதல்

கமுதி, பிப்.13:  கலெக்டர் வீரராகவராவ் உத்தரவின் பேரில், பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள், சுகாதாரத் துறையினர் கமுதியில் நேற்று பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருள் ஒழிப்பு பணியை தீவிரமாக நடத்தினர். 3 குழுக்களாக பிரிந்து பேருந்து நிலைய பகுதி, நாடார் பஜார், செட்டியார் பஜார், முஸ்லீம் பஜார் பகுதிகளில் அதிரடியாக கடைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருள், கேரி பைகளை பறிமுதல் செய்தனர்.

மொத்தம் 60 கிலோ கேரி பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பலசரக்கு கடை ஒன்றில் அதிகபட்சமாக ரூ.10ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ரூ.1,400 மதிப்பிலான புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்தனர். இதில் வட்டார மேற்பார்வையாளர் பொன்னு பாக்யம், சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், லட்சுமணராஜ் மற்றும் பலர் பங்கேற்று இந்த பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: