குடிசைகளுக்கு இலவச மின்விளக்கு திட்டம் புதிய விதிகளுடன் மாற்றியமைப்பு

திருவள்ளூர் : குடிசைகளுக்கு இலவச மின்விளக்கு திட்டத்தில் மாற்றம் செய்து டெபாசிட் செலுத்த மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை, எளியோர் மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்தினர். பல நேரங்களில் அவற்றில் தீப்பற்றி உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனையறிந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். குடிசைகளுக்கு ஒரு பல்பு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.மாநிலம் முழுவதும் பல லட்சம் ஏழை குடும்பங்கள் பயன்பெற்றன. தற்போது நவீன வாழ்க்கை முறையில் அனைவரின் வீடுகளிலும் மின்னணு சாதனங்கள் பயன்பாடு உள்ளது. மேலும் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க அரசு ₹11 செலவிடுகிறது. ஆனால் குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்குகிறது.இலவச மின்சார திட்டத்தில் நஷ்டமடைந்ததால் முறைப்படுத்த சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. எனவே, ஒரு விளக்கு இலவச மின்சாரம் பெறும் குடிசைகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதில் குடிசை வீடு 200 சதுர அடியில் இருக்க வேண்டும்.

அரசு வழங்கும் இலவச மின் சாதனங்களான ‘’டிவி’’, மிக்ஸி, பேன் மட்டும் பயன்படுத்தலாம். வீடு முதலில் யார் பெயரில் உள்ளதோ அவர், அவரது வாரிசுதாரர் பயன்பெற பெற தகுதி பெறுவார்கள். இந்த வீட்டை மற்றொருவர் விலைக்கு வாங்கி பயன்படுத்தினால் தகுதி இழப்பாகும். அந்த வீட்டிற்கு ₹910 டெபாசிட் செலுத்தி, வீட்டு இணைப்பாக மாற்றி மின்சார பயன்பாடு கணக்கிடப்படும். இதுதவிர இந்த வீடுகளில் மற்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்தி மின் செலவு அதிகரித்தால் ₹2,830 டெபாசிட்டுடன் வீட்டு மின் இணைப்பு கட்டணமாக மாதந்தோறும் செலுத்த வேண்டும். இவ்வாறு மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: