மேட்டுப்பட்டியில் ரேஷன் குறைதீர் முகாம்

தா.பேட்டை, பிப்.12: தா.பேட்டை ஒன்றியம், மேட்டுப்பட்டி கிராமத்தில் ரேஷன் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாசில்தார் ஆறுமுகம் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் கவிதா, வருவாய் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், கடை மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்பட்டது. முகாமில் பொதுமக்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: