திருச்சி, பிப்.12: குறும்படம் எடுப்பது எப்படி என்பது குறித்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான இலவச பயிற்சி முகாம் பெல் கைலாசபுரத்தில் வரும் 16ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தேனீக்கள் திரைப்பட சங்கம் சார்பில், சிறந்த குறும்படம் எடுப்பது எப்படி? என்ற தலைப்பில் இலவச பயிற்சி முகாம் வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு பெல் கைலாசபுரம் சிஐடியூ அரங்கில் நடைபெற உள்ளது. கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.