கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகள்

காஞ்சிபுரம், பிப்.12: தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் சார்பில் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு மற்றும் கலைப்போட்டிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டுத் திடலில் நடந்தது.

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், கலைத்திட்ட திட்டமிடல் மற்றும் மதிப்பிடல் துறையின் உதவிப் பேராசிரியருமான விஜயா தலைமை தாங்கினார். சோழன் கல்வியியல் கல்லூரி முதல்வர் அன்பு வரவேற்றார். விளையாட்டு மற்றும் கலைப்போட்டிகளை சோழன் கல்வியியல் கல்லூரி தாளாளர் சஞ்சீவி ஜெயராம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முதல்வர் பழனிராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டம், தொடர் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் என தனித்தனியாக ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் பேச்சு, கட்டுரை, பாடல் என கலைப் போட்டிகளும் நடந்தன. இந்த போட்டிகளில் 15 கல்லூரிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: