வேலூர், குடியாத்தத்தில் சாராய ரெய்டு கேள்விக்குறி கலால் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் வாகனங்களுக்கு டிரைவர்கள் இல்லை

வேலூர், பிப்.11: கலால் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் வாகனங்களுக்கு டிரைவர்கள் இல்லாததால் வேலூர், குடியாத்தத்தில் சாராய ரெய்டு கேள்விக்குறியாகியுள்ளது.   வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம், அணைக்கட்டு, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சாராய விற்பனை நடந்து வருகிறது. இதனை தடுக்க வேலூர், குடியாத்தம் 2 பகுதிகளுக்கு தனித்தனியாக இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாராய ரெய்டு நடத்தி குற்றவாளிகளை பிடிக்க அரசு சார்பில் 4 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் வேலூர், குடியாத்தம் 2 கலால் பிரிவு இன்ஸ்பெக்டர்களின் வாகனங்கள் இயக்குவதற்கு டிரைவர்கள் இல்லையாம். இதனால் சாராய விற்பனை எங்காவது நடைபெறுகிறதா? என்று புகார்கள் வந்தாலும் ஆய்வுக்கு ெசல்லமுடிவதில்லையாம். இதனால், வேலூர் மாவட்டத்தில் சாராய ரெய்டு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே வேலூர், குடியாத்தம் கலால் பிரிவுக்கு டிரைவர்களை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: