கலெக்டர் தகவல் தந்தை புகார் மணல் கடத்தல் லாரி, கார் பறிமுதல்

திருவெறும்பூர், ஜன.29: திருவெறும்பூர் அருகே விராலிமலை பகுதியிலிருந்து சோழமாதேவிக்கு மணல் கடத்தி வந்த லாரியை மற்றும் கடத்தலுக்கு உதவிய காரை நவல்பட்டு போலீசார் பறிமுதல் செய்ததோடு 2 பேரை கைது செய்தனர். திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட மாணிக்கநகர் பகுதியில் நீண்ட நாட்களாக சட்டத்திற்கு புறம்பாக அரசு அனுமதி இல்லாமலும் மணல் கடத்தப்படுவதாக நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் நேற்று நவல்பட்டு இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது சந்தேகப்படும்படி வந்த கார் ஒன்றை விசாரித்தபோது அவர் திருச்சி ஏர்போர்ட்டை சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திகேயன்(51) என்பது தெரியவந்தது. மேலும் அரசு அனுமதி இல்லாமல் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலைப் பகுதியில் இருந்து அனுமதியில்லாமல் திருவெறும்பூர் அருகே உள்ள மாணிக்க நகருக்கு லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் பேரில் கார்த்திகேயனை கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் சோழமாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட மாணிக்கநகர் பகுதிக்கு மணல் கொட்ட வந்த லாரியை பறிமுதல் செய்து எடமலைபட்டி புதுரை சேர்ந்த லாரி டிரைவரான வினோத்குமார்(30) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: