திருநல்லூரில் விவசாயிகளுக்கு கிராமப்புற பயிற்சி

கும்பகோணம், ஜன. 28: கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் வட்டாரம் திருநல்லூர் கிராமத்தில் வேளாண்மைத்துறை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் கிராமப்புற பயிற்சி வகுப்பு நடந்தது.வேளாண்மைத்துறை அலுவலர் கண்ணன் வரவேற்றார். சாக்கோட்டை வேளாண்மைத்துறை துணை இயக்குனர் கோமதி தங்கம் தலைமை வகித்து கூட்டு பண்ணைய திட்டத்தின் முக்கியத்துவம், கூட்டு விவசாய முறைகள், அதன் பயன்கள், பிரதம மந்திரியின் கவுரவ நிதி உதவி திட்டம், மண்வள அட்டை செயல்பாடு மற்றும் உழவன் செயலியியல் புதிய சேவைகளின் செயல்பாடுகளை குறித்து பேசினார்.

Advertising
Advertising

திருவிடைமருதூர் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் பேசுகையில், மண் மற்றும் நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள், உயிர் உரங்களின் பயன்பாடு மற்றும் நுண்ணீர் பாசன திட்டத்தில் உள்ள மானியங்கள் குறித்து பேசினார்.

வேளாண் அலுவலர் செல்வராணி பங்கேற்று தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், நெல் தரிசில் உளுந்து பயிரிடுவதால் வேர் முடிச்சிகளில் நைட்ரஜனை நிலை நிறுத்துதல், உயிர் உரங்களின் பயன்பாடு மற்றும் நெற்பயிரில் பூச்சி நோய் மேலாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து பேசினார். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சாந்தகுமாரி, ரஞ்சனி செய்திருந்தனர். துணை வேளாண்மை அலுவலர் சுந்தரேஸ்வரன் நன்றி கூறினார்.

Related Stories: