விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி ஆலோசனை வட்டார வள மையத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

அறந்தாங்கி, ஜன.28 : அறந்தாங்கி வட்டார வள மையத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. அறந்தாங்கி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட 12 மையங்களில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியை புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி வழிகாட்டுதலின்படி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி தொடங்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகா தலைமை தாங்கினார். அறந்தாங்கி வட்டார கல்வி அலுவலர் அருள் முன்னிலை வகித்தார். அறந்தாங்கி வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவயோகம் வரவேற்றார். பயிற்சியில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 , பேரிடர் மேலாண்மை , பாலின பாகுபாடு களைதல், குழந்தைகளின் உரிமைகள், பள்ளி நிதி எவ்வாறு பயன்படுத்துதல், பார்வை மட்டும் வழிகாட்டுதல், சமூக தணிக்கை மற்றும் வினா நிரல், பள்ளி முழுமை தரநிலை மற்றும் மதிப்பீடு, தரமான கல்வி மற்றும் கற்றல் விளைவுகள், தூய்மையான பள்ளி, நடத்தை மாற்றம் மற்றும் திறன் மேம்பாடு போன்ற தலைப்புகளில் 954 உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி அறந்தாங்கி ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், சிலட்டூர், நாகுடி, அத்தாணி , மரமடக்கி , சிதம்பர விடுதி, சுப்பிரமணியபுரம் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் பூவைமாகர் ஆகிய மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் குறுவள மையங்களில் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் செல்வராஜ், சசிகுமார், ஈஸ்வரன், சியாமளா, சரவணன் , பியூலா சாந்தி, கவிதா, மகேஸ்வரி, பார்வதி கோமதி, நீலவேணி, சரவணன் மற்றும் ஆசிரியர்கள் கருத்தாளர்களாக பயிற்சி அளித்தனர்.

Related Stories: