ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம்

ஈரோடு, ஜன.24:ஈரோட்டில் மக்கள் மன்ற அமைப்பாளர் செல்லப்பன் கூறியதாவது:ஈரோடு மாநகர பகுதிகளில் ரோடுகளை ஆக்கிரமித்து கடைகள், விளம்பர பலகைகளை வைத்துள்ளனர். இதை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் இருந்து பன்னீர்செல்வம் பார்க் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆனால், தற்போது மீண்டும் கருங்கல்பாளையம், பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, கனிமார்க்கெட் பகுதி, ஆர்.கே.வி.வீதி, கடைவீதி பகுதி, பிரப்ரோடு, சூரம்பட்டி, காந்திஜிரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும், பொதுமக்கள் நடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளையும், சாக்கடை கால்வாய்களையும் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்துள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறையினர் இதை அகற்றாமல் அலட்சியமாக உள்ளனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து 22ம்தேதி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்திசிலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தேன். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். இதைக்கண்டித்து விரைவில் அனைத்து பொது நல அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஈரோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: