பெரம்பலூர் வட்டாரத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழா இலவச கண் சிகிச்சை முகாம் 350 பேர் பயனடைந்தனர்

பெரம்பலூர், ஜன.24: பெரம்பலூர் வட்டாரப் போ க்குவரத்து அலுவலகம் சார்பாக, 31வது சாலைப் பாதுகாப்பு வார விழாவின் மூன்றாவது நாளான நேற்று முன்தினம் திருச்சி சென்னை தேசி ய நெடுஞ்சாலையில், பெர ம்பலூர்-சிறுவாச்சூர் இடை யே உள்ள தனலட்சுமி சீனி வாசன் மருத்துவக் கல்லூ ரி மருத்துவமனையில், பெ ரம்பலூர் மாவட்ட எல்லைக் குட்பட்ட பகுதிகளில் இரு ந்து இயக்கப்படும் பள்ளி மற்றும் கல்லூரிவாகன ஓட் டுனர்களுக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்களுக்கும் காவல்துறை வாகன ஓட்டு நர்களுக்கும் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்தப்ப ட்டது. இந்த இலவச கண் சிகிச் சை மற்றும் பொது மருத்துவ முகாமிற்கு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் இயக்குனர் ராஜபூபதி தலைமை வகித்தார். நெடுஞ்சாலைப் போக்குவரத்து டிராபிக் இன்ஸ்பெக்டர் கோபிநாத், டவுன் ட்ராபிக் இன்ஸ்பெக்டர் சௌந்தர ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமினை பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தொட ங்கி வைத்தார். இந்த முகா மில் பெரம்பலூர் தனலட் சுமி சீனிவாசன் மருத்து வக் கல்லூரி மருத்துவர் கள் மற்றும் செவிலியர்கள் இணைந்து பணியாற்றி பள்ளி, கல்லூரி வாகன ஓட் டுனர்கள் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட் டுனர்கள், காவல்துறை வா கன ஓட்டுனர்களுக்குப் பரி சோதித்துத் தேவையான மருந்துகளை வழங்கினர். இதில் மொத்தம் 350 வாக ன ஓட்டுனர்கள் கலந்து கொண்டு கண்கள் மற்றும் உடலைப் பரிசோதித்து அத ற்குத் தேவையான சிகிச் சைகளைப் பெற்று பயன டைந்தனர்.

Related Stories: