திறந்த வெளி மதுபாரான வாரச்சந்தை

பரமக்குடி, ஜன.24:  பரமக்குடி வாரச்சந்தை மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரசு போக்குவரத்து பணிமனைக்கு செல்லும் வழியில் உள்ளது. பரமக்குடி நகராட்சி மூலம் வியாழக் கிழமை தோறும் நடத்தப்படும் இந்த வாரசந்தைக்கு, ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி காரைக்குடி மதுரை,மேலுர்,பகுதியிலிருந்து புளி, மிளகாய், கருவாடு, காய்கறிகள் உள்ளிட்டவைகளும், அதே திடலில் ஆடு,மாடு சந்தையும் நடைபெறுகிறது.

எந்தவிதமாக மின்விளக்குகளும் இல்லாமல் வாரசந்தை செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக வெட்ட வெளியில் வியாபாரிகள் பொருள்களை விற்பனை செய்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்பெஸ்டாசீட் மற்றும் கான்கிரீட் கடைகள் கட்டப்பட்டது. இதனை முறையாக பராமரிக்காமல் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. அதுபோல் வாரச்சந்தையை சுற்றிலும் தடுப்புசுவர் கட்டப்பட்டும் முறையான பாதுகாப்பு இல்லாததால் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. வாரச்சந்தை கூடும் நாட்களை தவிர மற்ற நாட்களில் இங்கு ஆட்கள் நடமாட்டம் இருக்காது. இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் குடிமகன்கள் பகல் நேரங்களில் திறந்தவெளி பாராக மாறி விட்டனர்.  இரவு நேரங்களில் கஞ்சா போதையில் உள்ளவர்களுக்கு பொழுதுபோக்கும் இடமாகவும் மாறி வருகிறது.

Related Stories: