3 நாட்களாக இருளில் மூழ்கிய கிராமம் அவதியில் பிள்ளையார்குளம் கிராம மக்கள்

சாயல்குடி, ஜன.23:  சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் மூன்று நாட்களாக இரவு நேரத்தில் மின்சாரம் இன்றி கடும் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். சாயல்குடி அருகே உள்ள பிள்ளையார்குளம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக மின்சாரம் இன்றி கிராமம் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் கடும் அவதிப்பட்டு வருவதாகவும், மாணவர்கள் வீட்டு பாடங்களை படிக்க முடியவில்லை. அத்தியாவசிய எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்த முடியவில்லை என புகார் கூறுகின்றனர். இதுகுறித்து பிள்ளையார்குளம் கிராமமக்கள் கூறும்போது, இந்த கிராமத்தில் கடந்த 60 வருடங்களுக்கு முன்பு மின்கம்பங்கள் நடப்பட்டது. மின்கம்பங்களில் உள்ள மின்வயர்கள் பழுதடைந்து தாழ்வாக செல்கிறது. இதனால் விபத்து அச்சம் உள்ளது.

கடந்த சில வாரங்களாக இரவு நேரத்தில் குறைந்தழுத்த மின்சாரம் வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக மின்தடை ஏற்பட்டு, கிராமம் இருளில் சிக்கி தவிக்கிறது. இதனால் மின் சாதன வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்த முடியவில்லை. மாணவர்கள் வீட்டு பாடங்களை படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இது குறித்து சாயல்குடி மின்சார வாரியத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பிள்ளையார்குளத்தில் கூடுதல் திறன்கொண்ட மின்மாற்றிகளை அமைக்க வேண்டும். தாழ்வாக செல்லும் மின்வயர்களை இழுத்து கட்ட வேண்டும். சேதமடைந்துள்ள ஒரு சில மின்கம்பங்களை மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: