ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பஞ். தலைவர்களுக்கு பயிற்சி முகாம்

சாயல்குடி, ஜன.23:  ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணை தலைவர்கள் அறிமுக பயிற்சி முகாம் நேற்று நடந்தது. ராமநாதபுரம் யூனியன் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், உதவி இயக்குனர் கேசவதாசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் வீரராகவராவ் பேசும்போது, இந்திய அரசியலமைப்பில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிலைப்பாடுகள் குறித்தும், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம், தமிழ்நாடு அரசு ஊரக உள்ளாட்சி நிர்வாக அமைப்பு, பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர்கள் பொறுப்புகள், கடமைகள், கூட்ட நிகழ்வுகளை பதிவு செய்தல், கிராம சபை கூட்டம் அதிகாரங்கள், நிதிநிர்வாக நடைமுறை, செலவினம் ஆகியவற்றை பராமரித்தல், கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்டம் தயாரித்தல், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் பொதுமக்களுக்கு கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட 21 தலைப்புகளில் செயல்விளக்கம் அளித்து பேசினார். மேலும் 2019ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்ட நீர்நிலைகள் உள்ளிட்ட பஞ்சாயத்திற்குட்பட்ட நீர்நிலை பராமரித்தல், அரசு திட்ட கழிவறைகளை கட்டிகொடுத்தல், கழிவுநீர், குப்பைகள் தேங்கவிடாமல் தடுத்து சுகாதாரத்தை மேம்படுத்துதல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேமிப்பு நடவடிக்கைகளை சிறப்பாக நடைமுறை படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: