பயிர் காப்பீடுக்கு ஜன.31 கடைசி

பரமக்குடி, ஜன.23:   பரமக்குடி வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் சராசரியாக 1,200 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. மிளகாய் விளைச்சல் பாதிக்கப்படும் போது அந்த இழப்பை ஈடுகட்ட பிரதமரின் பயிர்காப்பீட்டு திட்டத்தின் மூலமாக காப்பீடு செய்யப்படுகிறது. பரமக்குடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அனுஷ்யா கூறுகையில், “மிளகாய் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியம் தொகையாக ரூ.1,130 செலுத்தினால் இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.22,600 வழங்கப்படும். பரமக்குடி வட்டாரத்தில் மிளகாய் பயிரிடப்படும்  கலையூர், வெங்கட்டான் குறிச்சி, எஸ்.காவனூர் உட்பட 25 வருவாய் கிராமங்கள் பயிர் காப்பீடு செய்யலாம். பயிர்காப்பீடு செய்வதற்கு விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அல்லது பொது இ-சேவை மையங்களில் ஆதார் அட்டை, விஏஓ அடங்கல் சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம். பயிர் காப்பீடு செய்வதற்கு ஜன.31ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு பரமக்குடி வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம்.

Related Stories: