நொறுங்கி விழுந்த அரசு பஸ் கண்ணாடி குடியுரிமை பாதுகாப்பு மாநாடு பிப்ரவரியில் நடத்த முடிவு

திருச்சி, ஜன.22: குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற திருச்சி மாவட்ட மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.திருச்சி தென்னூர் பள்ளிவாசல் வளாகத்தில் மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பேரவை கவுரவ தலைவர் மன்னான் சகஷிப் முன்னிலையில் வகித்தார். கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை சட்ட திருத்தம் இந்திய மக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சட்டம் அசாம் மாநிலத்திக்குரியது என்றாலும், இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா இச்சட்டம் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு ஒட்டு மொத்த இந்திய மக்களிடையே பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இஸ்லாமியர்களை தவிர்த்து மற்ற அனைத்து மதங்களை சார்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்ற சரத்தும், இந்தியாவில் வாழும் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் பற்றி எந்த தீர்வு இல்லாமையும் இந்திய முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களிடையே பேரதிர்ச்சியையும், பெரும் அதிருப்தியையும் தோற்றுவித்துள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. எனவே மத்தியில் ஆளும் பாஜ அரசு மக்கள் மனநிலையை புரிந்துகொண்டு குடிமக்களின் கருத்துக்களை மதசார்பின்றி நடுநிலையாக சீர்தூக்கி பார்த்து சிஏஏ சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

இச்சட்டங்களின் பின்னடைவுகள் பற்றி விவாதிக்கவும், ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளவும் ஜமாத்துகள் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டை பிப்ரவரி 2வது வாரத்தில் நடத்துவது, முக்கிய தலைவர்களை அழைத்து பேச வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ெபாதுக்குழு கூட்டத்தில் பேரவை தலைவர் சையது ஜாபர், பொது செயலாளர் அப்துல்வகாப், பொருளாளர் சீராஜூதீன், வழக்கறிஞர் சகாபுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: