வதிலையில் இன்சுலின் விழிப்புணர்வு

வத்தலக்குண்டு, ஜன. 22: வத்தலக்குண்டு சக்தி டயபடிஸ் பவுண்டேசன் மற்றும் கோவை இதயங்கள் டிரஸ்ட் இணைந்து இன்சுலின் பற்றிய விழிப்புணர்வு முகாமை நடத்தியது. சக்தி டயபடிஸ் பவுண்டேசன் டாக்டர் தெய்வேந்திரன் தலைமை வகித்து இன்சுலின் பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை கூறினார். மேலாளர் முகமது சுல்தான் வரவேற்றார். முகாமில் ஒரு பெண்ணுக்கு இன்சுலின் பம்ப் எனப்படும் செயற்கை கணையம், தானே பரிசோதனை செய்து கொள்ளும் குளுக்கோ மீட்டர் மற்றும் பிரிஜ் பேனர் இன்சுலின் உபயோகிப்பவர்களுக்கு கூல் பவுச் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. இதில் சர்க்கரை நோயாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். துணை மேலாளர் ராம்குமார் நன்றி கூறினார்.

Related Stories: