அனைத்து ஊராட்சி கிராமசபையிலும் ரேஷன் கடை கணக்கு தணிக்கை சமர்ப்பிப்பு கலெக்டர் தகவல்

திண்டுக்கல், ஜன. 22: திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் ஜன. 26ல் குடியரசு தினத்தன்று நடக்கும் கிராமசபை கூட்டத்தில் நியாய விலை கடைகளின் கணக்குகள் தணிக்கைக்காக சமர்ப்பிக்கப்படுகிறது என விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் ஜன.26ம் தேதி குடியரசு தினவிழா அன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள அனைத்து நியாய விலைக்கடைகளின் கணக்குகள், செயல்பாடுகள் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013ன்படி கணக்கெடுப்பு செய்யப்பட்ட விபரங்கள் (முன்னுரிமை வீட்டு பட்டியல் மற்றும் முன்னுரிமையல்லாத வீட்டு பட்டியல்) முதலியன சமூக தணிக்கைக்காக சமர்ப்பித்து மேம்படுத்தப்பட்டு ஒப்புதல் பெறப்படவுள்ளது.  

இந்த நிகழ்வில் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.  எனவே பொதுமக்கள் அனைவரும் கிராமசபை கூட்டத்தில்  கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற உரிய ஆலோசனைகள் வழங்கலாம் என மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: