பெத்தநாயக்கன்பாளையம் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்

சங்க கூட்டம்ஆத்தூர், ஜன.22: பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம், வட்ட சங்க தலைவர் சிவராமன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில், பயணிகள் நிற்பதற்கு முறையான நிலையில் நிழற்கூடம் அமைக்க வேண்டும். அதிக அளவில் பயணிகளும், பொதுமக்களும் பயன்படுத்தும் இடமாக உள்ள இந்த இடத்தில் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் செயலாளர் ஆறுமுகம், துணை செயலாளர் கொப்பு கொண்டான், அமுதா, மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: