மழலையர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி

நாகர்கோவில், ஜன.22: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மழலையர்களுக்கான முன்பருவ கல்வித்திட்டத்தின் கீழ் மழலையர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி 2 நாட்கள் நடைபெறுகிறது. அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பாடம் போதிக்கின்ற ஆசிரியர்களை தேர்வு செய்து இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியை குமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட உதவித்திட்ட அலுவலர் மரிய பாக்கியசீலன் பயிற்சியின் அவசியத்தை விளக்கினார். பயிற்சி கருத்தாளர்களாக சொர்ணலதா, ஜாண்சி பாய் மற்றும் தங்கேஸ்வரி ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சியில் 33 ஆசிரியைகள் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டனர். இப்பயிற்சி ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட கணினி வகைப்படுத்துனர் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: