விருதுநகர் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மண்டல மேலாளர் தகவல்

விருதுநகர், ஜன. 21: விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி பேருந்தை மண்டல மேலாளர் சிவலிங்கம் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ சாலை பாதுகாப்பு வார விழா ஜன.20 முதல் 25, மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விருதுநகர் மண்டலம் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி பேருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும். இன்று (ஜன.21) ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்கள் மூலம், இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு சாலை விதிகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்குதல் விதிமீறுவோறுக்கு ரோசாப்பூ வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். ஜன.22ல் விபத்து தடுப்பு விழிப்புணர்வு போக்குவரத்து காவல் சார்பிலும், 108 ஆம்புலன்ஸ் மூலம் விபத்து முதலுதவி செயல்முறை விளக்க பயிற்சி வகுப்புகள் நடைபெறும். ஜன.23ல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தி பரிசு வழங்கப்படும். ஜன.24ல் மது அடிமை மீட்பு பயிற்சி மற்றும் வாழும் கலை பயிற்சிகள், ஜன.25ல் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு இலவச கண்பரிசோதனை, ஜன.27ல் சிறப்பு ஓட்டுநர், நடத்துனர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: