திருச்சி மாநகரில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம் உப்பிலியபுரம் அடுத்த நாகநல்லூரில்

துறையூர், ஜன.21: உப்பிலியபுரம் அடுத்த நாகநல்லூரில் மின்கம்பியில் உரசி சோளத்தட்டை ஏற்றிவந்த லாரி தீயில் எரிந்து சேதமானது. திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள நாகநல்லூரில் வசிப்பவர் பூபதி (40), விவசாயி. சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான மாடுகளுக்கு தீவனத்திற்கு சோளத் தட்டைகளை நாமக்கல்லில் இருந்து நேற்றுமுன்தினம் வாங்கி லாரியில் ஏற்றிக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சோளத்தட்டையை தனது வயல்காட்டில் இறக்குவதற்காக இரவு நேரத்தில் வயலுக்கு அருகே வந்தபோது, லாரியின் மேலே இருந்த சோளத்தட்டையின் மீது மின் கம்பிகள் உரசியதில் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்ததும் அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து உடனடியாக சோளத்தட்டைகளை கவிழ்த்து விட்டனர்.

Advertising
Advertising

ஆனால் லாரி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததால் உப்பிலியபுரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக உப்பிலியபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி மனோகரன் தலைமையில் 6 தீயணைப்பு வீரர்களும், இதேபோல் துறையூர் தீயணைப்பு நிலைய அதிகாரி அறிவழகன் தலைமையில் 7 தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இதில் ரூ.10லட்சம் மதிப்புள்ள லாரியும், ரூ.80 ஆயிரம் மதிப்பிலான சோளத்தட்டையும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் பற்றி தகவலறிந்த உப்பிலியபுரம் போலீசார் நேரில் சென்று விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதனால் நாகநல்லூர் பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: