வேலூரில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு பஸ்சை கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூர், ஜன.21: வேலூர் புதிய பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு பஸ்சை கலெக்டர் தொடங்கி வைத்தார். 31வது சாலை பாதுகாப்பு வார விழா தமிழகத்தில் ஜனவரி 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையே போட்டிகள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. வேலூர் புதிய பஸ் நிலையத்தில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, விழிப்புணர்வு பைக் பேரணி மற்றும் நடமாடும் விழிப்புணர்வு கண்காட்சி பஸ் தொடக்க விழா நேற்று நடந்து. இதில் கலெக்டர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டு, கொடியசைத்து பைக் பேரணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, விழிப்புணர்வு கண்காட்சி பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்து, டிரைவர்களுக்கு கலெக்டர் துண்டுபிரசுரங்களை வழங்கினார். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கிய பைக் விழிப்புணர்வு பேரணி, காட்பாடி டான்போஸ்கோ பள்ளியில் நிறைவடைந்தது. இதில் ஆர்டிஓ ராமகிருஷ்ணன், மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் ராஜசேகரன், வெங்கட்ராகவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பைக்கில் ெஹல்மெட் அணிந்து பங்கேற்றனர்.

Related Stories:

>