வியபாரிக்கு பாட்டில் குத்து

கோவை, ஜன.21:  கோவை உக்கடம் ஜே.கே கார்டனை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் மகன் முகமது நவ்பல்(21). இவர் சின்னவேடம்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற வார சந்தையில் துணிக்கடை வைத்திருந்தார். அப்போது கடைக்கு 4 பேர் துணி வாங்க வந்தனர். அவர்கள் துணி விலை அதிகம் எனக்கூறி தகராறில் ஈடுபட்டனர். அப்போது பீர் பாட்டிலால் முகமது நவ்பலை குத்தினர். இதில் காயமடைந்த முகமது நவ்பல் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் சின்னவேடம்பட்டியை சேர்ந்த சுகுமார்(21), அசோக்குமார்(24), நவீன்ராஜ்(26), சூர்யா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: