சாலையில் நடந்து சென்ற பெண் மீது மோதிசரக்கு வாகனம் சாக்கடையில் கவிழ்ந்தது

அந்தியூர், ஜன.21: அந்தியூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மீது சரக்கு வாகனம் மோதி சாக்கடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சந்தைப்பேட்டை கெட்டி விநாயகர் கோயில் அருகே சரக்கு வாகனம் நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த புதுமேட்டூரை சேர்ந்த சத்யா (26) என்பவர் மீது மோதிவிட்டு அருகில் இருந்த சாக்கடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த சத்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சரக்கு வாகனம் ஓட்டி வந்த திருப்பூரை சேர்ந்த நவ்சந்த என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: