பிராமணர் சங்கம் வலியுறுத்தல் மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

பட்டுக்கோட்டை, ஜன. 21: பட்டுக்கோட்டை கரம்பயம் மீனாட்சி சந்திரசேகரன் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி சேர்மன் தலைமை வகித்து மாணவிகளுக்கு பொங்கல் வைக்கும் போட்டியை துவக்கி வைத்தார். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். கல்லூரி சீனியர் முதல்வர் ஷீலா மற்றும் முதல்வர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.

தமிழர் திருநாளாம் தைபொங்கல் விழாவை வரவேற்கும் விதமாக மாணவிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து பொங்கல் வைத்து சிறப்பித்தனர். மேலும் மாணவிகளுக்கு இசை நாற்காலி, லக்கி கார்னர், உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவிகளுக்கு இடையே நடந்த தைப்பொங்கல் விழா உழவர்களின் பெருமை, தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரங்களை நிலைநாட்டும் விதமாக கொண்டாடப்பட்டது. அதைதொடர்ந்து கலைநிகழ்ச்சி நடந்தது. விழாவில் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: