ஈரோடு மணல் மேடு மகாமாரியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

ஈரோடு, ஜன. 20:  ஈரோடு மணல்மேடு பகுதியில் சமயபுரம் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு, விநாயகர், கருப்பணசாமி, புத்து மாரியம்மன், மகாமுனி, சப்த கன்னிமார், பாம்பாட்டி சித்தர் ஆகிய சன்னதிகள் உள்ளன. இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை ஆகியன நடந்தன. பக்தர்கள் நேற்று காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

இன்று (20ம் தேதி) காலை 9 மணிக்கு கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது.

Advertising
Advertising

Related Stories: