உத்தமபாளையத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம்

உத்தமபாளையம், ஜன.20: உத்தமபாளையம் வட்டார ஜமாத்துல் உலமா சபை மற்றும் சிஏஏ எதிர்ப்பு கூட்டமைப்பினர் சார்பில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம், பழைய ஆஸ்பத்திரி திடலில் நடைபெற்றது.ஜமாத்துல் உலமா சபை மாவட்ட தலைவர் சையதுஅகமது மஹ்லரி தலைமை தாங்கினார். சேக்தாவூத் யூசுபி வரவேற்றார். வட்டார செயலாளர் அகமது இப்ராகீம் பைஜி நெறிமுறைப்படுத்தினார். இஸ்லாமிய கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலீலூர்ரகுமான், சேக்கமர்தீன், உலமாக்கள் சபை நிர்வாகிகள் மதார்முஹ்யித்தீன் உலவி, முகமதுஆதம் ரஷாதி, ஆகியோர் தொடக்க உரையாற்றினர். சென்னை வடபழனி தலைமை இமாம் தர்வேஷ்ரஷாதி, ஐக்கிய சமாதான பேரவை தலைவர் ஹாமித் பக்கிரி மன்பஈ, பாப்புலர் பிரண்ட் மாநில பேச்சாளர் மதுரை இத்ரீஸ், தமுமுக மாநில பேச்சாளர் பழனிபாரூக், ஜமாத்துல் உலமா மாநில துணைத்தலைவர் அலாவுதீன்மிஸ்பாஹி, உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். ஷாபிஈ பள்ளி இமாம் முகமது மீரான் உஸ்மானி, அகமதுகபீர் ஆகியோர் கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். பொருளாளர் அப்துல்காதீர் நன்றி கூறினார். ஆயிரக்கணக்கானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: