ஜாமீனில் வந்து தலைமறைவான இருவருக்கு வலை

தூத்துக்குடி, ஜன.20:  காரைக்குடியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சுரேஷ். இவர் கடந்த 2017ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் மாசார்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர்  இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் நிபந்தனை ஜாமீன் பெற்று கடந்த 16.12.19 அன்று வெளியே  வந்தார்.  அதன் பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இது குறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற எழுத்தர் ஞானச்சந்திரா அளித்த புகாரின் பேரில், தென்பாகம் போலீசார், சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

இதே போன்று தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரம் சுந்தரலிங்கம் நகரை சேர்ந்தவர் பேச்சிராஜ். இவர்  ஒரு திருட்டு வழக்கில் ஏரல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார். தொடர்ந்து அவர்  கடந்த 16.12.19 அன்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அதன்பிறகு பேச்சிராஜ்  கோர்ட்டில் ஆஜராகவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார், வழக்கு பதிவு செய்து பேச்சிராஜை தேடி வருகின்றனர்.

Related Stories: