மன்னார்குடி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு சீட்டு வழங்கும் பிரிவு புதிதாக துவக்கம்

மன்னார்குடி, ஜன. 20: மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக் கத்தில் ரூ 2 லட்சம் மதிப்பில் புற நோயாளிகளுக்கு சீட்டு வாங்கும் பிரிவு அமைக்கப்பட்டு அதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இயங்கி வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கத்தில் ரூ.2 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட புற நோயாளிகளுக்கு சீட்டு வழங்கும் பிரிவு துவக்க விழா நேற்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் கோவிந்தராஜ், தலைமை செவிலியர் கண்காணிப்பாளர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கு தலைமை வகித்து புதிய பிரிவினை துவக்கி வைத்து மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் பேசுகையில், இந்த மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகளை பெற மன்னார்குடி உள்ளிட்ட அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தினம்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிக்கும் வகையிலும் மருத்துவ மனை திட்டத்தின் கீழ் இந்த புதிய பிரிவு துவக்க பட்டுள்ளது. மேலும் 60வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி கவுன்டர் வசதி ஏற்படுத்த பட்டுள்ளது. பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என தனி வரிசைகள் ஏற்படுத்த பட்டுள்ளது. இதனை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியையொட்டி மருத்துவமனையில் அமைந்துள்ள பிரசவ வார்டு மற்றும் அதன் வெளிப்புற பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக செவிலியர் பிரபாகரன் வரவேற்றார். முடிவில் ஆய்வக அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார்.

Related Stories: