குமரியில் 1,235 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

நாகர்கோவில், ஜன.20 : குமரியில் 1.52 லட்சம் குழந்தைகளுக்கு போலியா சொட்டு முருந்து வழங்க, 1236 முகாம்கள்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. போலியோவை ஒழிக்கும் வகையில் நாடு முழுவதும் நேற்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது.  குமரி மாவட்டத்தில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 422 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 1,236 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த முகாமை, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே, வசந்தகுமார் எம்.பி., சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட பால் வள தலைவர் அசோகன், குமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் போஸ்கோ ராஜா, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி, உறைவிட மருத்துவர் டாக்டர் ஆறுமுக வேலன், டாக்டர்கள்  அருள்பிரகாஷ், பகவதி பெருமாள், பிரவீன், மாவட்ட கவுன்சிலர் ஜாண்சிலின் விஜிலா, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அய்யப்பன் மற்றும் எம்.ஜே. ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தில் 4,944 பணியாளர்கள் (பொது சுகாதாரம். ஊட்டச்சத்து, சத்துணவு, நகராட்சி) ஈடுபடுத்தப்பட்டனர். ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பூம்புகார் படகுத்துறை மற்றும் காந்திமண்டபம் ஆகிய இடங்களில் 20 முகாம்களும், உரிய பஸ் வசதி இல்லாத மலைப்பகுதிகளில் நடமாடும் குழுக்கள் மூலமும் போலியா சொட்டு மருந்து வழங்ப்பட்டது. இந்த முகாம் ஆய்வுப் பணிகளுக்கு 146 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

Related Stories: