குடும்ப தகராறில் இளம்பெண் மாயம்

திருச்சி, ஜன. 19: திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி நந்தினி(30). கடந்த 2012ல் திருமணமான தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நந்தினி மத்திய பஸ் நிலைய பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியில் இருந்தார். இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கடந்த 11ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய நந்தினி அதன்பின் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. இது குறித்து எ.புதூர் போலீசில் ஆனந்த் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நிக்சன் வழக்குப்பதிந்து மாயமான நந்தினியை தேடி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: