உச்சிநத்தம் கிராமத்தில் மாணவர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் பொங்கல் விழாவையொட்டி நடந்தது

கமுதி, ஜன. 19: கடலாடி அருகே உச்சிநத்தத்தில் பொங்கலையொட்டி நடந்த பட்டிமன்றத்தில் மாணவர்கள் பங்கேற்றனர்.கடலாடி அருகே உச்சிநத்தம் கிராமத்தில் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு, பிரண்ட்ஸ் சர்வீஸ் கிளப் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.இரவில், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. தொலைக்காட்சியும், செல்போனும் மக்களின் அறிவை வளர்க்கிறதா அல்லது அழிக்கிறதா என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது. பள்ளியின் ஆசிரியர் அழகர்சாமி நடுவராக இருந்து பேசினார். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: