பறவைகளிடம் இருந்து நூதனமுறையில் மிளகாய்களை பாதுகாக்கும் விவசாயிகள்

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.14:   ஆர்.எஸ்.மங்கலம் பகுதி மிகவும் முக்கியமான பகுதியாகும். இப்பகுதியில் மிளகாய் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பறவைகளிடமிருந்து பாதுகாக்க நூதன முறையை கையாண்டு வருகின்றனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை என்றாலும் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் ஆர்.எஸ்.மங்கலம் உள்ளடக்கிய பிரிக்கப்படாத திருவாடானை தாலுகாவாகும். அதேபோல் தமிழகத்தின் மிளகாய் களஞ்சியம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி போன்ற பகுதியாகும். இப்பகுதிகளில் நெல் விவசாயத்திற்கு நிகராக மிளகாய் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் விளையக் கூடிய மிளகாய் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்கின்றது. இங்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்றும் மிகப் பெரிய மிளகாய் சந்தை நடை பெற்று வருகிறது. இதில் ஆர்.எஸ்.மங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த மிளகாய் வத்தல்களை விற்பனைக்கு கொண்டுவந்து விற்பனை செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் சுற்று வட்டார பகுதிகளான செட்டியமடை, பிச்சனாகோட்டை, இருதயபுரம், செங்குடி, பூலாங்குடி, வரவணி, வானியக்குடி, வண்டல், சேத்திடல், அரியான் கோட்டை, பணிதிவயல் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு அதிகமான அளவில் மிளகாய் பயிரிட்டுள்ளனர். தற்போது மிளகாய் பழம் பழுத்து வருகின்ற சூழ்நிலையில், செடிகளில் பழுத்துள்ள மிளகாய் பழங்களை மைனா, கிளி, கவுதாரி, காகம் உள்ளிட்ட பறவைகள் சேதப்படுத்து அழித்து வருகின்றனர். எனவே பறவைகளிடமிருந்து மிளகாய் பழம் மற்றும் மிளகாய் செடிகளை காப்பாற்றும் விதமாக விவசாயிகள் தங்களின் மிளகாய் வயல் காடுகளில் பாலித்தீன் கவர்கள், சேலைத்துணி, கோணி ஆகியவற்றை கொடி மற்றும் தோரணம் போன்று கம்புகளில் ஊண்டி கட்டி மிளகாயை பாதுகாத்து வருகின்றனர்.

Related Stories: