மாநகராட்சி ஆணையர் தகவல் முசிறி எம்ஐடி கல்லூரியில் பட்டய கணக்காளர் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

முசிறி, ஜன.14: முசிறி எம்ஐடி கல்லூரியில் நடைபெற்ற பட்டயக்கணக்காளர் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கில் 7,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். முசிறி எம்ஐடி கல்வி நிறுவன வளாகத்தில் பட்டய கணக்காளர் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை வகித்தார். முசிறி எம்எல்ஏ செல்வராஜ், முன்னாள் அமைச்சர் சிவபதி, வருமானவரி இணை ஆணையர் நந்தகுமார், எம்ஐடி கல்வி நிறுவன குழுமத்தின் துணைத்தலைவர் பிரவீன்குமார், செயலாளர் ஆதித்யா, திருச்சி முதன்மை கல்வி அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தனர்.

தமிழக கூட்டுறவு சங்க மாநில தலைவரும், எம்ஐடி கல்வி குழுமத்தின் தலைவருமான இளங்கோ கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். கருத்தரங்கிற்கு முசிறி, தொட்டியம், லால்குடி, துறையூர், மண்ணச்சநல்லூர், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பட்டய கணக்காளர் பயில்வதற்கான கல்வித்தகுதி மதிப்பெண்கள் விவரம், கல்வி கற்கும் காலம் ஆகியவை குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. பட்டய கணக்காளர் படிப்பு முடித்த பின்பு கிடைக்கும் வேலைவாய்ப்பு குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் பற்றி பேசினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர்கள் பாலசுப்பிரமணியன், கனிஎழில் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Related Stories: