நடந்து சென்ற வாலிபரை மிரட்டி பணம் பறிமுதல்

பெரம்பலூர், ஜன. 14: பெரம்பலூரில் நடந்து சென்ற நப ரை மிரட்டிப் பணம் பறிமுதல் செய்த 2பேரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் சங்குபேட்டை அருகே நேற்று, பெயிண் டிங் வேலைபார்க்கும், குன் னம் தாலுக்கா, கீழப்புலி யூர் காலனித் தெருவைச் சேர்ந்த துரைசாமி மகன் வினோத்(22) என்பவர் நட ந்து சென்று கொண்டிருந் தார். அப்போது அந்த நப ரை, பெரம்பலூர் 13 வது வார்டு அழகிரி தெருவை ச்சேர்ந்த தங்கராசு மகன் வினோத்குமார்(23) மற்றும் ஆலம்பாடிரோடு சமத்துவ புரத்தை சேர்ந்த நவாத் பாஷா மகன் முகமது மாலி க்பாஷா (23)ஆகிய இருவ ரும் மிரட்டி பணம் ரூபாய் 500ஐ பறித்துச்சென்றனர். இதுகுறித்து வரப்பட்ட புகா ரின்பேரில் பெரம்பலூர்எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் பெரம்பலூர் டவுன் இஸ்பெக்டர் நித்யா வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தார்.

Related Stories: