பொங்கல் விழா

மதுரை, ஜன. 13: மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், பொங்கல் விழா மற்றும் பிரியங்கா காந்தி பிறந்த தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவை மாநகர் மாவட்டத்தலைவர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யது பாபு, துரையரசன், காமராஜ், ராஜா ஹசன், முருகன், பொதுச்செயலாளர் பால்ராஜ், பகுதி தலைவர்கள் சுந்தர்ராஜன், முருகன், ராதாகிருஷ்ணன், சுந்தர், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி ஷாநவாஸ், மாநில பொதுச்செயலாளர் தனலட்சுமி, பொதுச்செயலாளர் பஞ்சவர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

Related Stories: