கரூர், ஜன. 13: கரூர் திண்டுக்கல் சாலையின் மையப்பகுதியில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கும் பணிக்காக சென்டர்மீடியன் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் நகராட்சி பகுதியை சுற்றிலும் உள்ள முக்கிய சாலைப்பகுதிகளில் சென்டர்மீடியன்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கரூர் திண்டுக்கல் சாலை சுங்ககேட் பகுதியில் இருந்து வெங்ககல்பட்டி பகுதிவரை சாலையின் மையத்தில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகம் வரை சாலையோரத்தில் மின்விளக்குகள் உள்ளன. ஆனால், வெங்ககல்பட்டி வரை இந்த பகுதி முழுதும் இருட்டுமயமாகவே காணப்படுவதாக கூறப்படுகிறது.