கரூர், திருச்சி மாவட்டத்தில் 13 வழித்தடங்களில் புதிய நகரப் பேருந்துகள்

கரூர், ஜன. 13: கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் 13 வழித்தடங்களில் பல்வேறு கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு செல்லும் வகையில் புதிய நகரப்பேருந்துகள் துவக்க விழா நடைபெற்றது. கரூர் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேருந்துகளை கொடியசைத்து வைத்து துவக்கி வைத்தார். கரூரில் இருந்து புஞ்சை புகளுர் வழியாக வேலூர், தவிட்டுப்பாளையம் வழியாக வேலூர், மின்னாம்பள்ளி வழியாக வாங்கல், ராமேஸ்வரப்பட்டி வழியாக வாங்கல், பஞ்சமாதேவி வழியாக திருமுக்கூடலூர், மாயனூர் வழியாக காட்டுப்புத்தூர், சேங்கல் வழியாக பஞ்சப்பட்டிக்கு இரண்டு பேருந்துகள், உப்பிடமங்கலம் வழியாக சேங்கல், காணியாளம்பட்டி வழியாக மாமரத்துப்பட்டி, வெள்ளப்பாறை வழியாக வீரணம்பட்டி, கூடலுர் வழியாக கோட்டநத்தம் என 11 வழித்தடங்களுக்கும், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பெருகமணி வழியாக பெட்டவாய்த்தலைக்கு இரண்டு பேருந்துகள் என 13 வழித்தடங்களில் ரூ. 4கோடி மதிப்பில் 15 புதிய நகரப்பேரூந்துகள் துவக்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், எம்எல்ஏ கீதா, கரூர் மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் குணசேகரன், நகராட்சி ஆணையர் சுதா உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் துவக்கி வைத்தார்.

Related Stories: