விவேகானந்தர் ஜெயந்தியையொட்டி விழிப்புணர்வு பேரணி

ஈரோடு, ஜன. 13:  சுவாமி விவேகானந்தரின் 157வது ஜெயந்தியையொட்டி இந்து இளைஞர் முன்னணி சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று ஈரோடு வ.உ.சி.பூங்காவில் தொடங்கியது. இந்த பேரணி நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமை தாங்கினார். பேரணியை மாநில செயலாளர் கிஷோர்குமார் தொடங்கி வைத்தார். ஈரோடு வ.உ.சி.பூங்காவில் தொடங்கிய இந்த பேரணி சத்திரோடு வழியாக வீரப்பன்சத்திரத்தில் நிறைவடைந்தது. பின்னர் விவேகானந்தர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இப்பேரணியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்தும், மரம் நடுதல் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories:

>