சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை

போடி, ஜன. 12: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு போடியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள நடராஜர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி நடராஜருக்கு 16 வகையான மங்கல பொருட்களார் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. போடி கொண்டரங்கி மல்லையசாமி கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், போடி பரமசிவன் மலைக்கோயில், போடி பிச்சங்கரை கீழச்சொக்கநாதர் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Related Stories: