வேப்பூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன புதிய கட்டிடம், கூடுதல் வகுப்பறை காணொளி காட்சியில் முதல்வர் திறந்தார்

பெரம்பலூர்,ஜன.10: பெரம்பலூர் மாவட்டம், குன் னம்தாலுக்கா, வேப்பூர்ஒன் றிய ஆசிரியர் பயிற்சி நிறு வனத்தின் புதிய கட்டிடங்க ளையும், பெண்ணகோனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடு தல் வகுப்பறைகள் மற்றும் புதிய ஆய்வகங்களையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை த லைமைச் செயலகத் திலிரு ந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.பெரம்பலூர்மாவட்டம், வேப் பூர் ஒன்றிய ஆசிரியர் பயி ற்சி நிறுவனம், ரூ2.40 கோ டி மதிப்பீட்டில் தலா 520 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம், முதல்தளம், 2ம் தளம் மற்றும் 67 சதுர மீட்டரில் முகப்பு என மொத் தம் 1,625 சதுரமீட்டர் பரப்ப ளவில் பிரமாண்ட கட்டிடமா க கட்டப் பட்டுள்ளது. தரைத ளத்தில் 2 வகுப்பறைகள், முதல்வர்அறை,கணிப்பொ றி ஆய்வகம், நிர்வாக அலு வலகம், உணவகம், மற்றும் கழிவறை கட்டிடங்களும், முதல் தளத்தில் பணியாளர்கள் அறை, கலை மற்றும் கைவினை வளமையம், சுகாதாரம்,உடற்கல்வி ஆ ராய்ச்சி மையம், ஆசிரியர் கள் அறை (பெண்கள்), நூலகம்,கணிதஆய்வகம், பயி ற்சி அறை மற்றும் கழிவ றை கட்டிடங்களும், 2ம் தள த்தில் கூட்ட அரங்கம், இயற் பியல் ஆய்வகம், உயிரியல் ஆய்வகம், பொருள் இருப்பு அறை, ஆசிரியர்கள் அறை (ஆண்கள்), மற்றும் கழிவ றை கட்டிடங்களும் அமைக் கப்பட்டுள்ளன. மேலும் பெ ண்ணகோனம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ரூ1.19 கோடி மதிப்பீட்டில் புதிதாக 4 வகுப்பறைகள், அறிவி யல் ஆய்வகம், ஆண்கள், பெண்கள் கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதி உள் ளிட்டவைகள் அமைக்கப்ப ட்டுள்ளன. கட்டுமானப்ப ணிகள் அனைத்தும் நிறை வடைந்ததை முன்னிட்டு வேப்பூர்ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடங்களையும், பெண்ணகோனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் புதிய ஆய்வகங்களை முத ல்வர் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து பெர ம்பலூர் மாவட்டக் கலெக் டர் சாந்தா அங்கிருந்த பள்ளி மாணவ,மாணவிகள், ஆ சிரியர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட முதன் மைக் கல்விஅலுவலர் மதி வா ணன், செயற் பொறியா ளர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: