ஜெயங்கொண்டத்தில் பிளாஸ்டிக் பை உபயோகப்படுத்திய 7 கடைகளுக்கு ரூ.4,000 அபராதம்

ஜெயங்கொண்டம், ஜன. 10: ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் கப்புகளை பயன்படுத்திய 7 கடைகளுக்கு ரூ.4,100 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 6 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டதுஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து நான்குரோடு, கடைவீதி, கும்பகோணம் ரோடு, விருதாச்சலம் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, உபயோகப்படுத்தப்படுகிறதா என்று நகராட்சி ஆணையர். அறச்செல்வி தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்திய 7 கடைகளில் இருந்து 6 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் 7 கடைகளுக்கு ரூ.4,100 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. ஆய்வின்போது தூய்மை இந்தியா இயக்க மேற்பார்வையாளர் ரமேஷ், பரப்புரையாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: