ஐயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பேச்சு போட்டி

ஜெயங்கொண்டம், ஜன. 10: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் ஆண்டிமடம்-விளந்தை அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஐயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய பேச்சுப்போட்டி நடந்தது. அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பரிமளம் தலைமை வகித்தார். ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மதி கண்ணன், துணை இயக்குனர் சுகாதார பணிகள் நேர்முக உதவியாளர் குமார் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள், அயோடின் சத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் விளக்கம் அளித்தார். மேலும் மாணவிகளுக்கு அயோடின் சத்து பற்றிய குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து நடந்த பேச்சு போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. முகாமில் கண் குறைபாடு உள்ள மாணவிகளை கண்டறிந்து 26 பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கண் மருத்துவ உதவியாளர் கலைமதி, சுகாதார ஆய்வாளர்கள் குழந்தைவேல், உமாபதி செய்திருந்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Related Stories: