பொங்கல் பண்டிகையையொட்டி கரூர் நகராட்சி பகுதியில் மறுசுழற்சி பொருட்கள் சேகரிக்கும் முகாம்

கரூர், ஜன,9: பொங்கல்பண்டிகையையொட்டி நகராட்சி பகுதியில் மறுசுழற்சி பொருட்கள்சேகரிக்கும் முகாம் நடைபெறுகிறது. அந்தந்த பகுதியில் உபயோகமற்ற பொருட்களை கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சிபகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிர்வாகம் மறுசுழற்சி பொருட்கள்சேகரிப்பு முகாம் துவக்கியுள்ளது. வரும் 9ம்தேதி (இன்று)முதல் 14ம்தேதிவரை 6நாட்கள் இம்முகாமில் பொதுமக்கள் பழைய துணிகள் உள்ளிட்ட உபயோகமற்ற பொருட்களை ஒப்படைக்கலாம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்து உபயோகமற்ற பொருட்களை பொதுஇடங்களில் கொட்டுவதால் சுகாதாரகேடுஏற்படுகிறது. எனவே நகர்ப்பகுதிகளில் சுகாதாரக்கேடு ஏற்படாதவண்ணம், நகராட்சி வாகனத்தின் மூலம் தினமும் மாலை 3மணிமுதல் 6மணிவரை மறுசுழற்சி கழிவுபொருட்களை பெற்றுக்கொள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இம்முகாமினை பயன்படுத்தி தங்கள் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தும் பழையபொருட்களை நகராட்சி வாகனத்தில் ஒப்படைத்து நகரில் சுகாதாரமான பொங்கல் கொண்டாட முழுஒத்துழைப்பு வழங்குமாறு நகராட்சி ஆணையர் சுதா தெரிவித்துள்ளார்.

கீழ்கண்ட இடங்களில் உபயோகமற்ற பொருட்களை சேகரம் செய்யப்பட உள்ளது. வேலுச்சாமிபுரம் மெயின்ரோடு, துப்புரவு பணி மேற்பார்வையாளர் 84899 16781, குளத்துப்பாளையம் (சுகாதாரவளாகம் அருகில்) 84899 16766, குளத்துப்பாளையம்சந்தை (விஏஓஆபீஸ் அருகில்), 84899 16757, திட்டச்சாலை மெயின்ரோடு 84899 49557, பூங்குயில்நகர் வெங்கமேடு 84899 16790, என்எஸ்கேநகர் 84899 16787, ரத்தினம்சாலை (சுகாதாரவளாகம் எதிரில்) 97897 36576, கருப்பாயிகோயில்தெரு 84899 49551, மினிபஸ்நிலையம் 84899 16775, பசுபதிபுரம்(வாட்டர்டேங்க் அருகில்) 98421 95208, திருவள்ளுவர் மைதானம் 96551 84992, மக்கள்பாதை 84899 16783, பசுபதிபாளையம் மெயின்ரோடு 84899 16783, தொழிற்பேட்டை மெயின்ரோடு 84899 16759, நரிகட்டியூர்ரோடு 84899 49555, வடக்கு காந்திகிராமம் மெயின்ரோடு 84899 16773, காந்திகிராமம் மைதானம் 84899 49559, திண்ணப்பாநகர் மைதானம் 99948 55097, சிவாஜிநகர் தெற்குகாந்திகிராமம் 84899 49559, முத்தலாடம்பட்டி மைதானம் 98655 32300, வெங்கடேஸ்வரா நகர் மெயின்ரோடு 96291 11498, ஜீவாநகர் 96291 11498, தாந்தோன்றிமலைமெயின்ரோடு (பழைய எஸ்பி ஆபீஸ்) 98655 32300, ராயனூர் மெயின்ரோடு 848999 16786. மேற்கண்ட செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு பழைய பொருட்களை ஒப்படைக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories: