மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடி பகுதியில் தண்ணீர் லாரிகளை சிறுவர்கள் ஓட்டுவதால் விபத்து அபாயம்

உடல்களை கொண்டு செல்ல முடியவில்லை

கீழக்கரை, ஜன.8: கீழக்கரையில் தண்ணீர் விற்பனை செய்யும் கனரக வாகனமான லாரிகளை சிறுவர்கள் ஓட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆகவே காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரை மற்றும் ஏர்வாடி பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் குடி தண்ணீர் விற்பனை செய்து வருகின்றனர். இந்த லாரிகளில் சிலவற்றை 15 முதல் 17 வயதுடைய சிறுவர்கள் இயக்குகின்றனர். இதனால் விபத்து ஏற்பட அதிகமான வாய்ப்புள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் லாரியை சந்திலிருந்து திருப்பும் போது இ.சி.ஆர் சாலையில் வாகனம் வருகிறதா என்று கூட பார்க்காமல் திரும்பியதால் டூவீலர் அதன் மீது மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேபோல் சில மாதங்களுக்கு முன் தண்ணீர் லாரியை பின்னால் எடுக்கும் போது ஒருவர் மீது ஏறி பலியாகியுள்ளார்.

இதேபோல் சில குடி தண்ணீர் லாரிகளை ஓட்டுனர் உரிமம் இல்லாத சிறுவர்கள் இயக்குகின்றனர். இவர்கள் குடிதண்ணீரை விற்பனை செய்வதற்கு தெருக்களில் ஓட்டி செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளது. எனவே காவல்துறை அதிகாரிகள் கீழக்கரை மற்றும் ஏர்வாடி பகுதியில் இயக்கப்படும் அனைத்து தண்ணீர் லாரிகளையும் நிறுத்தி ஓட்டுனர் உரிமம் உள்ளவர்கள் இயக்குக்கின்றனரா என்று ஆய்வு செய்து சிறுவர்களாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: